கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில் குழந்தையுடன் பெற்றோர் என 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ட்ரிபிள் ரைடிங் தடையிலிருந்து விதிவிலக்கு கோரி மத்திய அரசை அணுகுவது குறித்து கேரள போக்குவரத்து துறை பரிசீலித்து வருவதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.