
சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரத் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல விபச்சார பெண் தரகர் நதியா என்பவர் அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாகவும் அதற்கு 25 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து நதியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தன்னுடைய தோழியோடு இணைந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். சமூக வலைதளங்கள் செல்போன் செயலி மூலமாக இந்த தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். இந்த விபச்சார கும்பலானது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்த பெண்களையும் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வந்த பெண்களையும் ஆசை வார்த்தை கூறி இந்த தொழிலில் தள்ளி உள்ளார்கள்.
சிறுமிகளையும் இதில் ஈடுபடுத்தி உள்ளனர். இதனையடுத்து இந்த விபச்சார கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியை விபச்சார தொழிலில் தள்ளிய நதியா உள்ளிட்டோர் மீது போக்க சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.