தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள், PHH -AAY என்ற அந்தியோதயா அன்னை யோஜனா திட்ட அட்டை, அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத் தலைவிக்கு தான் உரிமை தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி ஏற்கனவே முடக்கிவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் குடும்ப தலைவிகள்,கூலி வேலை செய்பவர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலை இறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.