வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் வாரிசு படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதாவது, குடும்பத்தினருடன் விஜய் இருப்பது போல் இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இத்திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.