
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஒரு மருத்துவ மாணவனை சீனியர் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதாவது பிரஸ் ஜெயின் உட்பட சீனியர் மாணவர்கள் மூன்று பேர் கல்லூரி வளாகத்தில் வைத்தே அந்த மாணவனை அடித்தனர். இதில் பிரஸ் ஜெயின் குடும்பத்தினருக்கு தகாத மெசேஜ் அனுப்பப்பட்டதால் மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் புகார் கொடுத்துள்ள நிலையில் பிரஸ் ஜெயின் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் குடும்பத்தினருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதாக கூறி ஜூனியர் மாணவன் மீது பிரஸ் ஜெயினும் புகார் கொடுத்துள்ளதால் இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
भोपाल में MBBS स्टूडेंट को सीनियर्स ने चप्पलों से पीटा, वायरल हुआ वीडियो#BhopalNews #MBBSStudentAssault #Ragging #CampusViolence #MedicalCollege #ViralVideo #Nishatpura #StudentSafety #OnAirIndia #BreakingNews #MPSamachar pic.twitter.com/dfZqcSf3x8
— MP Samachar (@MPSamacharIN) July 2, 2025