
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ள நிலையில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமூக அக்கறை நிறைந்த படமாக உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் முன்பு அளித்த ஒரு பேட்டியில் தன் மனைவி லதா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
இதனை தற்போது ரஜினி ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். அதாவது நடிகர் ரஜினிகாந்த் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாராம். அந்த சமயத்தில் ரஜினியை பேட்டி எடுப்பதற்காக லதா வந்துள்ளார். அப்போது லதாவுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். லதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் தான் அந்த பழக்கத்திலிருந்து வெளியே வந்ததற்கு தன் மனைவிதான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் லதாவை தனக்கு அறிமுகம் செய்து வைத்தது ஒய்.ஜி மகேந்திரன் தான் என்றும், அதற்காக நான் என்றென்றும் அவருக்கு கடன் பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.