குஜராத் மாநிலம் வதோதரா என்னும் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு ரவியின் மனைவி கர்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு 9 மாதம் ஆகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று ரவி அவரது குடும்பத்தினருடன் இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் ஒன்று ரவியின் இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் ரவியின் மனைவி வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை உயிரிழந்தது. பின்பு அருகில் உள்ளவர்கள் ரவியின் மனைவி மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 6 வயது குழந்தையின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில் அவர்கள் விபத்தை ஏற்படுத்திய  கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிறுவர்கள் எனவும் மது போதையில் கார் ஓட்டியதும் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை கைது செய்துள்ளனர்.