
இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது வாரத்தை கடந்த நிலையில், இதுவரை 18 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த தொடரின் 19வது ஆட்டமானது ஏப்ரல் 6 அன்று ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒருவருக்கொருவர் சவாலாக மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாகத் தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் நான்கு தமிழக வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாய் சுதர்சன், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் இந்த ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இவர்களில் சிலர் கடந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ள நிலையில், ஒரே போட்டியில் நான்கு தமிழர்கள் களமிறங்குவதை ரசிகர்கள் பெருமையாகக் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலே கூட தமிழ்நாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், குஜராத் அணியின் இந்த முடிவு தமிழ்நாடு ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதுவரை மூன்று ஆட்டங்களில் இரு வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தமிழர் படை சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று முதலில் டாஸ் வென்ற குஜராத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்க்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்தனர். இதில் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கில் 61 ரன்கள் கடந்த நிலையில், ஷெர்பேன் ரூத்ர்போடு 35 ரன்கள் வரை எடுத்திருந்தார். இறுதியில் குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. மேலும் இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.