
பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இப்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சித்ரா லட்சுமணன் ஒரு யூடியூப் சேனலில் பலரும் அறியாத தகவல்களை கூறி வருகிறார். அவர் கூறியதாவது, சண்டைக்கோழி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஷாலின் பெற்றோர் கீர்த்தி சுரேஷை பார்த்துள்ளனர்.
அவர்களுக்கு கீர்த்தி சுரேஷை பிடித்து விட்டது. விஷாலுக்கு கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து வைக்க அவர்கள் ஆசைப்பட்டுள்ளனர். இதனால் இயக்குநர் லிங்குசாமியிடம் இந்த விஷயத்தை கூறியுள்ளனர். லிங்குசாமி கீர்த்தி சுரேஷிடம் சென்று விஷாலின் பெற்றோர் விருப்பத்தை கூறியுள்ளார். அப்போது கீர்த்தி சுரேஷ் தான் பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.