
ஐபிஎல் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில், நிதிஷ்குமார் ரெட்டி தன்னுடைய விக்கெட்டை வீணாக்கியதற்காக கடும் கோபத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறினார். ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட் விரைவில் சென்றதும் நிதிஷ்குமார் ரெட்டி களமிறங்கினார். அப்போது அவர் டிராவிஸ் ஹெட்டோடு சேர்ந்து 61 ரன்கள் சேர்ந்து எடுத்தார். டிராவிஸ் ஹெட் 47 ரன்களில் ஆட்டம் இழந்ததையடுத்து ஹைன்ரிக் கிளாசனுடன் 34 ரன்கள் சேர்த்தார். ஆனால் ரன் அவுட் ஆனார் .
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) March 27, 2025
முதல் தர வீரர்கள் ஆட்டம் இழந்ததால் நிதிஷ் ரெட்டியிடம் அந்த இன்னிங்ஸை முடிப்பதற்கான பொறுப்பு இருந்தது. ஆனால் 15வது ஓவரில் ரவி பிஷ்னோயின் சுழற் பந்தில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து கிளீன் போல்ட் ஆகினார். அவர் 28 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் மிகுந்த கோபத்தோடு அவர் தலையில் இருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் .இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.