
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் தெலுங்கு மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். முதலில் சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் அடுத்ததாக வெள்ளி திரையில் களமிறங்கி தற்போது முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படங்களில் மிகவும் பிசியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது ஒரு பேட்டியில் கிளாமர் குறித்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கிளாமர் என்று கூறினான் என்னுடைய உடலை விற்க மாட்டேன். கிளாமர் என்பது சரியானது தவறா என்பதை விவாதிக்க நான் தயாராக இல்லை. அதன் பிறகு சினிமாவில் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று நினைத்து ஒருபோதும் வருந்தக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதோடு சில முடிவுகளை எடுக்கும் போது மிகவும் கவனத்துடன் கையாள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை பிரியா பவானிசங்கர் கிளாமர் என்ற பெயரில் உடலை விற்க மாட்டேன் என்று கூறியது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.