சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினம் நேற்று(ஆக்.31)   நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நிகழ்ச்சியில், பா.ஜ.க. எம்.பி.யான கணேஷ் சிங், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேன் மூலம் மேலே சென்றபோது இந்தச் சர்ச்சைச் சம்பவம் நிகழ்ந்தது.

நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அவர் மேலே சென்ற சில வினாடிகளிலேயே கிரேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்து நடுவழியில் நின்றது. இதனால் கோபமடைந்த கணேஷ் சிங், கிரேன் கேபினுக்குள் இருந்தபடியே உதவ வந்த ஆப்பரேட்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“>