இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று ஜெய்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இறுதியில் 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.  நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பதிவு செய்த நான்காவது வெற்றி இதுவாகும். மேலும் இன்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி கிரீன் கலர் ஜெர்சியில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.