பொதுவாக பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்று சொல்வது பழமொழி. ஆனால் கிரிக்கெட் மைதானத்திற்கு பாம்பு ஒன்று புகுந்ததால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது. 2023 லங்கா பிரீமியர் லீக் ஆட்டத்தில் galle Titans மற்றும் dambulla aura அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஆட்டம் பாம்பால் தடைப்பட்டது. இந்த சம்பவம் வைரலாகி வந்தது. ஒரு மைதானத்திற்குள் பாம்பு புகுந்து ஆட்டத்தை நிறுத்தியது கவனத்தை ஈர்த்தது.

அதன் பிறகு பாம்பு அங்கிருந்து சென்றதும் சம்பந்தப்பட்ட அனைவருடைய பாதுகாப்பை உறுதி செய்த பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து தினேஷ் கார்த்திக் பாம்பின் தோற்றம் குறித்து நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது தன்னுடைய பதிவில், பாம்பை நாகின் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர் 2018 ஆம் வருடம் நிதாஹாஸ் டிராபியின் போது வங்காளதேச கிரிக்கெட் அணி நடத்திய நாகின் கொண்டாட்டத்தை குறிப்பிட்டு இந்த பாம்பு வங்காளதேசத்தில் இருந்து வந்தது என நினைத்தேன். களத்துக்குள் பாம்பு  என்று நக்கலாக ட்வீட் போட்டுள்ளார்.