
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் ரசூல் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்ற மாணவன் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த போட்டியின் கடைசி பந்தில் சக்தி “வைடு” என கூறி மறுபடியும் பந்தை வீச சொல்லியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு சிறுவன் சக்தியின் கழுத்தில் மட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த சக்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சக்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சக்தி ஒரே மகன் என்பதால் அவரது இழப்பை தாங்க முடியாமல் பெற்றோர் தவறி அழுதனர். சக்தியை தாக்கிய சிறுவனும், அவரது குடும்பத்தினரும் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு காரணமாக உயிரிழப்பு நிகழ்வது சோகமான விஷயம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.