மத்திய அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் லட்சாதிபதி சகோதரிகள் எனப்படும் லக்பதி நிதி யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களுடைய பணியை செய்து தன்னிறைவு அடைவதோடு மட்டுமின்றி மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக செயல்பட முடியும். இந்த திட்டம் முதல் முறையாக ஹரியானா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது . இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தொடங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் இரண்டு கோடி பெண்களில் லச்சாதிபதியாக மாற்ற வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்று கூறியுள்ள பிரதமர் அதற்காக பிளம்மிங், எல்இடி பல்ப் போன்றவற்றை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் லக்பதி நிதி யோஜனா தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மகளே சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான டிரோன்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். முதற்கட்டமாக 15 ஆயிரம் மகளை சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும் இது போன்ற திட்டங்களால் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.