தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வல்லான். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சுந்தர் சி ஒரு கொலைகான காரணத்தை பல்வேறு கோணங்களில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை விறுவிறுப்பாக காட்டியிருக்கும் படம் தான் வல்லான். 2023 ஆம் வருடமே இந்த படம் ரிலீசுக்கு தயாரானது ஆனால் சில காரணங்களால் படம் வெளியாவது தடைபட்டது.

இந்நிலையில் வல்லான் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வல்லான் திரைப்படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான விஆர் டெல்லா பிலிம் பேக்டரி தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளது.