
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவருடைய மகன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். ஆனால் மனித உரிமைகள் ஆணையம் அந்த வழக்கை ரத்து செய்தது. இது தொடர்பாக ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் கொடுத்த புகாரை விசாரிக்காமல் அந்த வழக்கை ரத்து செய்தது தவறு என்று கூறினார். அதோடு அந்த வழக்கை முடித்து வைத்த மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் இதனால் காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் கொடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.