தமிழகத்தில் சமீபத்தில் பிரபல தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று பிரபல ஆரோக்கியா நிறுவனம் திடீரென பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு லிட்டர் ஆரோக்கிய பால் விலை 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு அரை லிட்டர் பால் பாக்கெட் விலை 37 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக அதிகரித்துள்ளது. திடீரென பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.