மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தவறியதால் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்கிறது. அதாவது வரத்து குறைவு காரணமாக வெங்காய விலை உயர்கிறது. அதன்படி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 90 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று முருங்கைக்காய் சீசன் முடிவடைந்ததால் அதன் விலையும் அதிகரிக்கிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் சென்னை கோயம்பேடு சந்தையில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதுபோக ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 68 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.