பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் பார்தோ கோஸ் (76). இவர் உடல்நலக் குறைவினால் தற்போது மரணமடைந்தார். இவர் அக்னிசாக்ஷி, 100 டேஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1990களில் பாலிவுட் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்தார்.

இவர் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.