குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்பு பலகாரங்கள் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் இனிப்பு பலகாரங்கள் மற்றும் உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படுமாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் இனிப்பு பலகாரங்கள் அல்லது இனிப்பான உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமாம்.

காலையில் இனிப்பான உணவுடன் நாளை தொடங்கினால் மேலும் மேலும் இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதோடு பசியும் அதிகரிக்கும். இதனால் சீரான உணவை எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வைட்டமின்கள், நார் சத்துக்கள் இல்லாத இனிப்பு உணவுகளை காலையில் உட்கொள்வதால் அன்றைய தினத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறதாம்.

இனிப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகரிப்பு, உடல் பருமன், பல் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.