பாலிவுட் பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, மும்பையில் சன்பர்ன் இசைத் திருவிழாவிற்குச் (Sunburn Festival 2025) சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கினார். அமெரிக்க டிஜே டேவிட் குட்டாவுடன் இணைந்து மேடையேறவிருந்த அவரை நோக்கி, மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாகத் தனது காரை மோதினார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நோரா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனையில், உள் இரத்தக் கசிவு போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும், பலமான மோதலினால் லேசான மூளை அதிர்ச்சி (Slight Concussion) ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையிலும், தனது தொழில்முறை கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் மீண்டும் மேடைக்குத் திரும்பினார்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

“>

மூளை அதிர்ச்சியுடன் சன்பர்ன் மேடையில் அவர் பங்கேற்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஹாரர் திரைப்படமான ‘காஞ்சனா 4’ மற்றும் ‘கேடி: தி டெவில்’ ஆகிய படங்களின் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அவர் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது