பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு காலாவதியாகும் தேதி கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொருட்கள் தயாரிக்கப்படும்போது பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும் தேதி கொடுத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். உணவு பொருட்கள் காலாவதியாகிவிட்டால் எவ்வளவு பெரிய மதிப்புடைய பொருளாக இருந்தாலும் குப்பையில் தான் போட வேண்டும்.

பொதுவாக நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் காலாவதி ஆகிவிட்டதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் பிரிட்ஜ்ஜில் நீண்ட நாள் வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தும் போது மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும். நட்ஸ் போன்ற பொருட்கள் காலாவதி தேதியை கடந்து இருந்தாலும் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் அதில் இருக்கும் என்பதால் சாப்பிடக்கூடாது. குமட்டல், வயிற்றுப்போக்கு  போன்ற தொந்தரவுகள் ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..