
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் அந்த சிறுமியின் தாய் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பருடன் தன் மகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அதாவது தன் மகளை வீட்டில் விடும்படி தன் நண்பரிடம் கூறி அந்த தாய் ஏற்றி வைத்த நிலையில் சிறுமியும் அவருடன் சென்றார்.
இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தன் நண்பர்கள் சிலருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதனை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்த நிலையில் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் நடந்த விவரங்களை கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை சீரழித்த 5 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நம்பிக்கையானவர்களாக இருந்தால் கூட பெண் பிள்ளைகளை தைரியமாக நம்பி அனுப்பக்கூடாது என்பதற்கு இந்த விஷயம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.