தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று கார் ரேஸ் பயிற்சிக்காக நடிகர் அஜித் கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கர விபத்தில் சிக்கினார். அதாவது கார் அதிவேகமாக வந்த நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் சேதமடைந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவருடைய மேனேஜர் சுகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது போன்று வேண்டாம் என்று அஜித்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் விபத்துக்கு பிறகு நடிகர் அஜித்தை ஒருவர் கைத்தங்கலாக அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதோடு  அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.