மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வரதட்சணை வெறியால் பெற்ற மகளையே தந்தை ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. லோஹியா பஜார் பகுதியைச் சேர்ந்த யோகிதா அகர்வால் என்பவருக்கும், மனன் அகர்வால் என்பவருக்கும் கடந்த 2024-ல் திருமணம் நடந்தது.

திருமயமான நாளிலிருந்தே கார் கேட்டு யோகிதாவை அவரது கணவர் மனன் சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த மனன், மீண்டும் கார் கேட்டு யோகிதாவை மிரட்டியுள்ளார்.

அவர் மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த மனன் வீட்டில் இருந்த ஆசிடை எடுத்து யோகிதா மீது ஊற்றியுள்ளார். அந்த நேரத்தில் யோகிதா தனது 4 மாதப் பெண் குழந்தையைக் கையில் வைத்திருந்த நிலையில், ஆசிட் வீச்சில் குழந்தையும் படுகாயமடைந்தது.

குழந்தையைக் காப்பாற்ற வந்த யோகிதாவின் மாமனார் மகேந்திரா மீதும் ஆசிட் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த தாய் மற்றும் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அந்த ‘காடையன்’ மனன் அகர்வாலை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.