
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் ஓகால்கண்டா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அலறி கூச்சல் போட்டனர்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தவிர காரில் பயணித்து ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.