கார்த்தியின் 27வது படத்தில் பிரபல சீரியல் நடிகை ஜோடியாக இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி, தற்போது நலன்குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்ததும் ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உடன் இணையவுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் நடிகை ஸ்வாதி கொன்டே நடிக்க உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும், என்று கூறப்படுகிறது. சீரியல் நடிகை கார்த்திக்கி ஜோடியாகும் செய்தி சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.