விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் செஞ்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 65 அரசு பள்ளி மாணவர்களும், 91 தனியார் பள்ளி மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 45 அரசு பள்ளி மாணவர்கள், 25 தனியார் பள்ளி மாணவர்கள் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தேர்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர். காப்பி அடித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணை அறிக்கை துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விடைத்தாள்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.