பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. காபி குடித்தவுடன் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இப்படி காபி குடிக்கும் பலர் காபி பொடியை சரியான முறையில் சேமித்து வைக்காவிட்டால் காபி இறுகி அதன் அமைப்பு வாசனை மற்றும் சுவை ஆகியவை மாறிவிடும். ஆனால் பிற கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருட்களை போல காபி காலாவதி ஆகாது. நீங்கள் வருத்த காபி கொட்டைகள் அல்லது சீல் செய்யப்பட்ட காபி பாக்கெட்டுகளை பல வருடங்களுக்கு புதிது போல அதே நறுமணத்துடன் எப்படி வைத்திருப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் காபியை சரியான கண்டைனரில் சேமிக்க வேண்டும். காபி கொட்டைகள் அல்லது அரைத்த காபி பொடியை காற்று உள்ளே செல்ல இயலாத டப்பாக்களில் உடனடியாக அடைத்து வைக்க வேண்டும். இதைத் தவிர காபி வெளிச்சத்திற்கு உணர்திறன் கொண்டது. அதனால் சுவை குறையலாம். எனவே எப்போதும் காபி பொடியை வெளிச்சம் உள்ளே நுழைய முடியாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும்.

காபி டப்பாவை எப்போதும் குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும். அடுப்பு அல்லது வெப்பத்தை உருவாக்கக்கூடிய பிற பொருள்களுக்கு அருகில் வைக்கக்கூடாது. ஈரப்பதம் காபி பொடியின் சுவையை குறைத்து விடும். குளிர்சாதன பெட்டி அல்லது ஃப்ரீசரில் காபியை சேமித்து வைக்க வேண்டாம். வலிமையான வாசனை கொண்ட உணவுகளுக்கு அருகே சேமித்து வைப்பதை தவிர்க்கவும் காபி எளிதாக அதன் சூழலில் இருக்கக்கூடிய வாசனைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே வலிமையான வாசனை கொண்ட மசாலா பொருட்கள் அல்லது காய்கறிகள் ஆகியவற்றின் அருகில் காபியை சேமித்து வைக்க கூடாது.