காபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா குறையுமா என்ற குழப்பத்தில் இருக்கும் பலருக்கும் தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. ஹார்வர்டு பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், சர்க்கரை இல்லாமல் காபி குடித்தவர்களின் உடல் எடை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தினமும் ஒரு கப் கூடுதலாக குடிப்பது உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க உதவுவதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் காபி பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.