
சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன்(23) என்பவர் காதலித்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த வள்ளியப்பன் அர்ஜூனனை மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அர்ஜூனன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வள்ளியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அர்ஜூனனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.