விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முத்துராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இந்நிலையில் முத்துராஜ் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மாணவி கர்ப்பமானார், பின்பு இதுபற்றி அறிந்த அவரது தாயார் அதிர்ச்சியானார். இதுகுறித்து மாணவியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று முத்துராஜை பற்றி புகார் அளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்து முத்துராஜை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.