வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி அருகே புது வசூர் தீர்த்தகிரி மலை உள்ளது.இங்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி நகை மற்றும் பணம் போன்றவற்றை பறிப்பதாக‌ குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அய்யனார் மற்றும் விநாயகம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.