திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர்  விக்னேஸ்வரன். 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை  காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அந்த சிறுமியுடன்  உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

ஒருகட்டத்தில் இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார், இந்த புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் வவிக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.