
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஹரால்டு டெரன்ஸ். இவர் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற அமெரிக்காவின் முன்னாள் வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் தன்னுடைய 100 வயதில் தற்போது காதலியை கரம்பிடித்து உள்ளார். அதாவது ஜீன்ஸ்வெர்லின் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 96 வயது ஆகிறது. இவர்களுடைய திருமணம் பிரான்ஸ் நாட்டில் உள்ள நார்மாண்டி என்ற பகுதியில் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான நிலையில் இந்த வயதில் திருமணம் தேவையா என பலரும் கேட்கிறார்கள். இதற்கு ஜீன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இளைஞர்களுக்கு மட்டும்தான் காதல் உணர்வு தோன்றுமா. எங்களுக்கு காதல் வரக்கூடாதா. எங்களுக்கும் அதுபோன்ற உணர்வுகள் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.