பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் கைபத்கான் புரோகி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அனைவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்ததும் அதனால் தான் அவர்கள் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் காவல்துறையினர் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது அந்த இளம் பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அந்த பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் இளம்பெண்ணின் காதலன் அவரின் மொத்த குடும்பத்தையும் கொலை செய்யுமாறு கூறியுள்ளான். அதற்கான யோசனையையும் வாலிபர் கூறிய நிலையில் அந்த பெண் அவர் கூறியபடி கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார். இது தெரியாமல் அந்த மாவினை வைத்து ரொட்டி தயார் செய்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்து விட்டனர். இந்த விவகாரத்தில் நேற்றுதான் இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் தந்தை உட்பட அனைவரையும் இளம்பெண் விஷம் வைத்துக்கொண்டது அந்த நாட்டில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.