
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரன்ஸ் ஆம்ஸ்டராங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணிடம் பிரின்ஸ் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரைப் பிரிந்து பிரின்ஸ் அவருடைய வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுடன் இருந்த பிற துண்டிப்புகளையும் முற்றிலும் முடித்துவிட்டார்.
இதனால் அந்த பெண் பிரின்ஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் தன்னை காதல் திருமணம் செய்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணையும் அவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இது பற்றி முதல் மனைவி கேட்டபோது வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என பிரின்ஸ் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரின்ஸை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.