
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் லோணி பார்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 19, 2025 அன்று மாலை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஹோட்டல் ரிசெப்ஷனில் உள்ள சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த ஹோட்டல் ஊழியர் கவுரவ், 22 வினாடிகளில் அவரை சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
#Ghaziabad
होटल में महिलाओं साथ घुसे बदमाशों ने होटल में सो रहे युवक से की मारपीट,
थप्पड़, लात घुसो से पीटा, दरअसल युवक दिल्ली के रहने वाले सलमान को एक दिन पहले होटल में अपने महिला मित्र को पीटने से रोका था और बाहर के दिया था, 19 मई को सलमान अपने दोस्तों के साथ पहुंचा जिसमें… pic.twitter.com/zMlHgw5kVK— Lokesh Rai (@lokeshRlive) May 20, 2025
தகவலின்படி, அதே நாள் காலை, சல்மான் என்ற இளைஞர் தனது காதலியுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். இருவருக்குள் தகராறு ஏற்பட்டு, சல்மான் தனது காதலியை அடித்துள்ளார். இதை பார்த்த ஹோட்டல் ஊழியர் கவுரவ், இடையில் நுழைந்து சண்டையை நிறுத்த முயன்றுள்ளார்.
இதனை வெறுத்த சல்மான், சில மணி நேரத்தில் தனது நண்பர்கள் மற்றும் 2 பெண்களுடன் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து, கவுரவை தாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்த ரூ.1,800-ஐ கொள்ளையடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில், ருபினா என்ற பெண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர் கவுரவ், 7 பேருக்கு எதிராக தாக்குதல், கொலை முயற்சி மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளின் கீழ் லோணி பார்டர் போலீஸ் நிலையத்தில் அதே நாளில் புகார் அளித்துள்ளார்.
வீடியோ வைரலான பின்னர், மக்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது, போலீசார் சம்பவத்துக்கு தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.