சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் முகமது அலி. முப்பது வயதான இவர் சினிமா தயாரிப்பாளர். சினிமா படப்பிடிப்பு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமான இவர் அதனை மறைத்து தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த 28 வயது இனம்பெண்ணை  காதலிப்பதாக கூறி அதன் பிறகு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணிற்கு சத்து மாத்திரை என்று கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து கருவை கலைத்துள்ளார். மேலும் பாலியல் தொல்லை வீடியோவை இணையத்தில் கசிய விடுவேன் என்று மிரட்டி பணம்  பறித்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இவரை காவல்துறையினர் கைது செய்தனர்.