ஆண்டுதோறும்  பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்த தினத்தில் நீங்கள் அனைவரும் பசுக்களை அணைத்து கொண்டாடுங்கள். அப்படி செய்யும்போது உங்களுக்கு உணர்வு ரீதியாக வளமும் கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

அன்னை போல் நம்மை வளர்த்தெடுக்கும் இயற்கையான பண்புகளால் அனைவருக்கும் வழங்கும் குண நலன்களால் அது காமதேனு எனவும் கோமாதா எனவும் அழைக்கப்படுகிறது. புதிய கலாச்சார போக்கால் வேத பாரம்பரியங்கள் அழிவின் நுனியில் உள்ளது. பசுவை பாதுகாப்பது அதனை பாதுகாக்க உதவும் எனக் கூறியுள்ளது. அதனால் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதியை விரும்புபவர்கள் அனைவரும் வாழ்வை மகிழ்ச்சியாக மற்றும் நல்ல ஆற்றல் முழுவதும் கிடைக்க தாயான பசுவின் முக்கியத்துவங்களை மனதில் கொண்டு பசுவை அணைக்கும்  நாளாக கொண்டாடலாம் என கூறியுள்ளது.