பார்க்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் போன்ற இயற்கை அழகுகள், காதல் ஜோடிகளுக்கான நேரங்களை மகிழ்ச்சியாக மாற்றும் இடங்களாக இருக்கின்றன. ஆனால் சில நேரங்களில், இந்த இடங்கள் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் அபாயங்களை தந்துவிடுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ, காதலனும் காதலியும் நீர்வீழ்ச்சிக்கரையில் சந்திக்கும்போது நடந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில், காதலன் தனது காதலியை திருமண ப்ரோபோசலை தெரிவிக்க நீர்வீழ்ச்சிக்கு அழைத்து வருகிறார். ஆனால் அந்த சந்திப்பு அவர்களுக்கான கடைசி தருணமாகி முடிகிறது. காதலியிடம் பேசிக் கொண்டிருந்த காதலன் திடீரென கால்தடுமாறி நீரில் அடித்துச் செல்லப்படுகிறார். “என்னை காப்பாத்து…!” என்று அலறியபோதும், காதலி பார்வையிலேயே நின்றுவிட்டாள்; அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற பயத்தில் முயற்சி எடுக்கவில்லை. இதனால், காதலியின் விசுவாசத்திலும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த வீடியோவை X தளத்தில் அபிஷேக் ஆனந்த் என்ற பயனர் பதிவிட்டுள்ளார். இதற்கு இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் எண்ணற்ற கருத்துகள் பதிவாகியுள்ளன. “இந்த ஜோடிக்கு என்ன ஆனது?”, “முடிவில் மோதிரம் கிடைத்ததா?”, “ஓ…பாவம் காதலர்கள்!” என நெஞ்சை நொறுக்கும் பாணியில் பலரும் தங்களது வருத்தங்களை பகிர்ந்துள்ளனர்.