
லாஸ் ஏஞ்சல்ஸில் கிராமி விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராப் பாடகரான கேன்யே வெஸ்ட் தனது காதலி பியான்கா சென்சாரியுடன் கலந்துகொண்டார். பியான்கா சென்சாரி மாடல் மற்றும் நடிகை ஆவார். இந்த நிலையில் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கும் போது கேன்யே தனது காதலியுடன் இணைந்து போஸ் கொடுத்தார்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பியான்கோ தனது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவசர அவசரமாக இரண்டு பேரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.