இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முன்வந்துள்ள நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு ஹமாசால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை பார்த்ததோடு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் ஹமாஸின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டன் காசா பகுதிக்கு வந்து இஸ்ரேலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்க வேண்டும் என்று எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவது குறித்தும் அவர்களுடனான உறவை நீட்டிப்பது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.