
பேச்சு சுதந்திரத்தை குறைக்கும் வகையில் காங்கிரஸ் முதல் முறையாக அரசியல் அமைப்பை நிறுத்தி 19 ஏ சட்ட பிரிவை சேர்த்ததாக மத்திய அமைச்சர் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, 72 ஆண்டுகளில் பல நாடுகள் சுதந்திரம் பெற்று புதிய அத்தியாயத்தை துவங்கியது ஆனால் அங்கு ஜனநாயகம் வெற்றி பெறவில்லை. ஆனால் நமது ஜனநாயகம் வேரூன்றியது. ஒரு துளி ரத்தம் சிந்தாமல் நம் பல மாற்றங்களை செய்துள்ளோம். பல சர்வாதிகாரிகளின் ஆணவத்தை மக்கள் ஜனநாயக அடிப்படையில் தகர்த்து எறிந்தனர்.
பொருளாதார ரீதியாக நம்மால் சுதந்திரம் பெற இயலாது என கூறியவர்களுக்கு நமது நாடும் அரசியல் அமைப்பு தக்க பதிலடி கொடுத்துள்ளது. நாம் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். பிரிட்டனை முந்திவிட்டோம். முதல்முறையாக 1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி அரசியலமைப்பு முதல் முறையாக திருத்தம் செய்யப்பட்டது. பொது தேர்தலை சந்திக்கும் வரை காங்கிரஸ் காத்திருக்க விரும்பவில்லை என்பதுதான் அதன் முக்கிய காரணம். பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக 19 ஏ சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது காங்கிரஸ் கட்சி 77 முறை அரசியலமைப்பை திருத்தியுள்ளது. ஆனால் நாங்கள் 22 முறை தான் திருத்தம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.