தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற விவாதம் அனல் பறக்கும் நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “யார் ஆட்சியமைப்பார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அரசியல் சரிவைச் சந்திக்கும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “காங்கிரஸ் முகத்தில் கரியைப் பூசிக்கொள்வது உறுதி” என அவர் பதிவிட்டுள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. தவெக மற்றும் பிற கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பதில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக-வின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
