
நாட்டில் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதாவது மரண காப்பீடுக்கான நாமினி பணத்தை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக காப்பீடு போட்டவர் மரணம் அடையும் நிலையில் அவருடைய நாமினிக்கு 30 நாட்களில் காப்பீடு தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் திருத்தம் மேற்கொண்டு கால அவகாசத்தை 15 நாட்களாக IRDAI திருத்தியுள்ளது. மேலும் பாலிசி சரண்டர் மற்றும் பகுதியளவு பணம் எடுத்தல் அவகாசத்தை 7 நாட்களாகவும் IRDAI குறைத்துள்ளது.