
திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியில்சுரேஷ் மற்றும் சங்கீதா தம்பதி வசித்து வருகிறார்கள். வீட்டில் திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், சொந்த வீடு கட்டுவதற்கான நிதி தேவை காரணமாக, அவர்கள் தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற நபர்களிடமிருந்து கடன் வாங்கி இருந்தனர்.
இந்த கடன்களைகடனை திருப்பி கேட்டு வரும் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், அவர்களது மனதில் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், இருவரும் தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுரேஷ் உயிரிழந்தார். சங்கீதாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.