கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 49 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது 30 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக இருப்பதாக கலெக்டர் பிரசாத் கூறியுள்ளார். அவர்கள் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை 24 மணி நேரமும் மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பல எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.